• Social Network:

கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்

சென்னை: லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967 ஆம் ஆண்டு தொடங்கி இந்த நடப்பு ஆண்டு 2017-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஒன்று, பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.கவும் புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வும்தான் ஆண்டு கொண்டிருக்கிறது.

இரண்டு திராவிட கட்சிகளை மீறி, ஒரு மாற்று அணி தேவை. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு குறுக்கு வழியில் முற்பட்டு, அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு, மத்திய அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும். இதற்காக வருகின்ற 9-ந் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.