• Social Network:

உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும்: அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைபணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்று வாழ்த்துகிறது.

தமிழக அரசின் தலைமை செயலகம் உள்பட அனைத்து மாவட்டடங்களில் உள்ள எல்லா துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவது.

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு வழங்கியது போல தமிழக அரசு உடனடியாக 7-வது ஊதியக்குழு அமைத்து ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

கோரிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் அழைத்து பேசிட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு பணியாளர்களாக அரசாணை வழங்கிட வேண்டும் என்பது உள்பட 56 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதுகுறித்து மாநில தலைவர் கே.கணேசன் கூறியதாவது:-

இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு எங்களது சங்கத்தினை அழைத்து பேசாவிட்டால் மார்ச் மாதம் 6-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

2-வது கட்டமாக ஏப்ரல் 8-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

3-வது கட்டமாக மே 13-ந்தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என செயற்குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.