• Social Network:

பாரம்பரியம் என்பதற்காக மட்டும் ஜல்லிக்கட்டை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கு இன்று  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் குழந்தைத் திருமணங்களை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். குழந்தை திருமணமும் பல நூற்றாண்டுகள் பழமையானது" என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதி நடைப்பெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.